Thursday, October 8, 2009

இன்று ஒரு சமையல் குறிப்பு - 1

மட்டன் சுக்கா

தேவையான பொருட்கள்:
ஆட்டு இறைச்சி - 200 கிராம்வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1பச்சை மிளகாய் (நீளவாக்கில்) - 2கருவேப்பில்லை - சிறிதளவு இஞ்சி, பூண்டு (அரைத்தது) - 1 மேசை கரண்டிசீரகம் - 1 மேசை கரண்டிசோம்பு - 1 மேசை கரண்டிமிளகு பொடி - 1 மேசை கரண்டிசீராக பொடி - 1 மேசை கரண்டிமல்லி தூள் - 1 மேசை கரண்டிகரம் மசாலா - 1 மேசை கரண்டிமஞ்சள் தூள் - சிறிதளவுசமையல் எண்ணெய் - 3 மேசை கரண்டிஉப்பு - தேவையான அளவு



சமைக்கும் முறை:
1. பிரஷர் குக்கரில் ஆட்டு இறைச்சி, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 விசில் விடும் வரை வேக வைக்கவும்.


2. அடுப்பை பற்ற வைக்கவும். வாணலியை அதன் மேல் வைக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போடவும்.


3. வெங்காயம் நன்கு வணங்கி வந்தவுடன் பச்சை மிளகாய், கருவேப்பில்லை, இஞ்சி-பூண்டு (அரைத்தது), சீரகம், மிளகு தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு கிளறி கொள்ளவும். பிரஷர் குக்கரில் வெந்து வந்திருக்கும் ஆட்டு இறைச்சியையும் வாணலியில் போடவும் (தேவை பட்டால் குக்கரில் இருக்கும் தன்னேரை பயன்படுத்தி கொள்ளலாம்).


4. மிதமான சூட்டில் 5 நிமிடம் வைத்து இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா தயார்.


சமையல் குறிப்பைவிட முக்கியமான குறிப்பு:
இது இணையத்தில் சுட்டது.